அன்று வேங்கை வயல்... இன்று திருவந்தவார்... காஞ்சிபுரம் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த அவலம்!

By SG Balan  |  First Published Nov 21, 2023, 6:13 PM IST

மாணவர்கள் குடிக்கவும் மதிய உணவு சமைக்கவும் பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்திருக்கும் அவலம் அந்த ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


காஞ்சிபுரம் அருகே திருவந்தவாரில் உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட அவலச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் வெறொரு பள்ளியில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் அருந்துவதற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது.

Latest Videos

undefined

இந்தத் தொட்டியில் இருந்துதான் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல தொட்டியில் தண்ணீர் பிடித்து மதிய உணவு சமைத்துள்ளனர்.

என்னய்யா நடக்குது கட்சிக்குள்ள... தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டம் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

பிறகுதான் தொட்டில் உள்ள நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை பள்ளி நிர்வாகம் தவிர்த்துவிட்டது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பள்ளிக்கு நேரில் சென்ற காஞ்சிபுரம் காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டிக்குள் மலம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மாணவர்கள் குடிக்கவும் மதிய உணவு சமைக்கவும் பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்திருக்கும் அவலம் அந்த ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கெனவே வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் அதேபோன்ற நிகழ்வு நடத்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறை அல்ல... மகளிர் கிரிக்கெட்டிலும் தோல்விக்குப் பின் தோள் கொடுத்த பிரதமர் மோடி!

click me!