பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் கோவை சைபர் கிரைம் போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்தனர். தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்யும் போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிஸ்க்கு கூடும் பலம் - முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு கரம்
undefined
இதே போன்று அவர் மீது அடுக்கடுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குகள் அதிகரித்ததன் அடிப்படையில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பெண் காவலர்கள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மீண்டும் தாக்கல் செய்த மனு இன்று கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மத்திய அரசின் புதிய 3 சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால் இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக டெல்லி வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
விசாரணையின் போது மனு தாரருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டு 80 நாட்களை கடந்துள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பு வாதிட்டது. இதனை ஏற்ற நீதிபதி, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் நிபந்தனை தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.