சீனியர், ஜூனியர் பாரபட்சம் கிடையாது; 6 மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை - பிளே பாய் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Jul 24, 2024, 3:53 PM IST

கோவை மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கோவைப்பாளையம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னுடன் படிக்கும் சக மாணவரான ஸ்ரீதர்சன் என்னை சிறிது காலம் காதலித்தார். அப்போது தங்கள் இருவரும் வெளியில் சென்ற புகைப்படங்கள் அவரிடம் உள்ளன.

இன்ஸ்டா காதலியை முதல் நாளும்! வீட்டில் பார்த்த பெண்ணை 2-வது நாளும் திருமணம் செய்த இளைஞர்! சிக்கியது எப்படி?

Tap to resize

Latest Videos

இதனிடையே தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதவிவேற்றம் செய்து விடுவேன் என்று கூறி பாலியல் தொல்லை அளிக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று ஸ்ரீதர்சன் மீது 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரும் தன்னை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஒரே நபர் மீது இருவேறு பெண்கள், இருவேறு சமயத்தில் புகார் அதித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் புகார் குறித்து மாணவனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையி்ல் மாணவன் இதே போன்று வேறு சில பெண்களையும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்தது கண்டுடிபிக்கப்பட்டது.

வன்னியர்களின் எதிர்காலம் உங்களுக்கு விளையாட்டப்போச்சா.. கொதிக்கும் ராமதாஸ்!

அதன்படி மாணவனின் செல்போனை ஆய்வு செய்த போது மொத்தமாக 6 பெண்களுக்கு இதே போன்று பாலியல் தொல்லை அளித்தது கண்டு பிடித்தது. இதனையடுத்து மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவன் வேறு ஏதேனும் பெண்களிடம் இதுபோன்று நடந்து கொணடாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!