கோவையில் சுமார் 15 ஆண்டுகளாக வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேய அடைந்து கிடந்த இரு பெண்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் ராம்நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வயதான நிலையில் தாய், அவரது மகள் என இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சுமார் 15 ஆண்டுகளாக அக்கம் பக்கத்தினர் என யாருடனும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் இந்த இரு பெண்கள் குறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கூட எந்த தகவலும் தெரியாமல் இருந்துள்ளது.
அம்மா உணவகத்தில் ஆய்வு என்ற பெயரில் நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்; பழனிசாமி விளாசல்
undefined
மேலும் இவர்கள் இருவரும் பல வருடங்களாக தங்கள் வீட்டையும் சுத்தம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே உணவு கழிவுகள், குப்பைகளை சேமித்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் எரிச்சலடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பந்தப்பட்ட குடியிருப்பிற்குள் நுழைந்த ஆர்வலர் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அடித்து ஆடும் அண்ணாமலை; அரசியலுக்கு நடுவே கூலாக சில் செய்த வீடியோ
வீட்டில் பெண்களுக்கு தெரியாமல் தனது செல்போன் மூலம் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை படம் பிடித்து மாநகராட்சி பணியாளர்களுக்கு தெரியப்படுத்தினார். அதன் அடிப்படையில் அங்கு லாரியுடன் வந்த பணியாளர்கள் வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளிச் சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து மட்டும் சுமார் 4 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மர்ம வீட்டில் குடியிருந்த பெண்களை அழைத்துச் சென்று மனநல பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பக்கத்து வீட்டார் கோரிக்கை விடுத்துள்ளனர்.