கோவை வால்பாறை அருகே காதலி கண் முன்பு நீர்வீழ்ச்சியில் குதித்த காதலன் மாயம்

By Velmurugan s  |  First Published May 30, 2023, 4:27 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காதலியின் கண் முன்னே நீரில் குதித்த காதலன் மாயம். தீயணைப்பு, காவல் துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது சோலையார் எஸ்டேட். இப்பகுதிக்கு கூழாங்கல் ஆற்றில் இருந்து வரும் நீர் சுமார் 50 அடி உயரத்திலிருந்து தாழ்வாக செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜாகர் (வயது 21) என்பவர் தனது 19 வயது  காதலியுடன் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

வால்பாறை பகுதியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு தடை செய்யப்பட்டுள்ள சோலையார்  எஸ்டேட் பகுதிக்குள் சென்றுள்ளார்.   அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்தபடி பிர்லா பால்ஸ் நீர்வீழ்ச்சி அருகே  சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஜாகர் தண்ணீரில் விழுந்துள்ளார். அப்பொழுது அவருக்கு கையை கொடுத்து காப்பாற்ற முயன்ற காதலியும் தண்ணீரில் விழுந்தார். 

“ஆத்தா மகமாயி” சிஎஸ்கே வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை கடவுளிடம் போராடிய ரசிகர்

இச்சம்பவத்தில் ஜாகர் தண்ணீருக்குள் மாயமானார். காதலி அதிர்ஷ்டவசமாக 20 அடி தூரத்தில் கரை சேர்ந்தார். அப்பகுதிக்கு வந்த தேயிலை தோட்ட காவலர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஆற்றில் மாயமான ஜாகரை தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர்  தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இருட்டு மற்றும் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட தேடுதல் இன்று காலையில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதுவரை உடல் கிடைக்கப்படாத நிலையில் தீயணைப்பு துறை தீவிரமாக தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur Duraisamy MDMK; மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

click me!