மவுஸ் வாங்குவது போல் சென்று லேப்டாப் திருடி மாட்டிக்கொண்ட இளம்பெண்

Published : May 01, 2023, 04:17 PM ISTUpdated : May 01, 2023, 04:20 PM IST
மவுஸ் வாங்குவது போல் சென்று லேப்டாப் திருடி மாட்டிக்கொண்ட இளம்பெண்

சுருக்கம்

கோவையில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரியாமல் மடிக்கணினியை திருடி மாட்டிக் கொண்ட இளம்பெண்ணின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக விஷ்ணு என்பவர் பணி புரிந்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாலை ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளம்பெண்  கடைக்கு வந்து கம்ப்யூட்டருக்கு மவுஸ் பார்க்க வேண்டும் எனக் கூறி உள்ளனர். 

அப்போது விற்பனையாளர் அந்த இளைஞருக்கு   மவுஸ் காண்பித்து கொண்டு இருந்த போது அந்நேரத்தை பயன்படுத்தி உடன் வந்த  இளம்பெண் காட்சி படுத்தபடுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மடிக் கணினியை எடுத்து அவரது பையில் ஒளித்து வைத்து உள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தாண்டியா நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

பின்னர் அங்கு வந்த விற்பனையாளர் காட்சிபடுத்தப்பட்டிருந்த மடிக் கணினி இல்லாததை பார்த்து இளம்பெண்ணிடம் கேட்டு உள்ளார். முதலில் அந்த இளம் பெண் தான் எடுக்கவில்லை என மறுத்ததைத் தொடர்ந்து பேக்கை காண்பிக்கும்படி விற்பனையாளர் வலியுறுத்தி உள்ளார். பிறகு அந்த இளைஞர், இளம் பெண்ணிடம் இருந்து பேக்கை வாங்கி அதில் இருந்த மடிக் கணினியை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்துவிட்டு மவுஸும் வாங்காமல் கடையை விட்டு வெளியே சென்று உள்ளனர். தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?