வருமான வரித்துறை அதிகாரி‌ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை; மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பியோட்டம்

By Velmurugan s  |  First Published Apr 29, 2023, 10:52 PM IST

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையன் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது சக்தி நகர். இந்த நகரில் பல குடியிருப்புகள் உள்ளன. ‌இதில் பாலக்காடு மாநிலத்தில் வருமானவரித் துறையின் துணை கமிஷ்னராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி மற்றும் குடும்பத்துடன் இங்கு வீடு வாங்கி வசித்து வருகின்றனர். நேற்று காலை தன் குடும்பத்துடன் சென்னை செல்வதற்காக கால்டெக்சி புக்செய்து கோவை விமானநிலையம் சென்று கிளம்பி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கண்ணன் அவரது வீட்டு கதவு திறந்து கிடப்பதை எதிர் வீட்டில் உள்ளவர்கள்‌ பார்த்து உள்ளனர்.‌ இது குறித்து கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் சென்று பார்கும்படி கூறி உள்ளார். எதிர் வீட்டார்‌ வீட்டின் உள்ளே வந்து பார்த்த போது முன் கதவு உடைக்கப்பட்டு, பீரோ உள்ளிட்டவை சாவி கொண்டு திறக்கப்பட்டு துணிகள் களையப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

Latest Videos

undefined

Crime News: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

உடனடியாக தொலைபேசி மூலம் வடவள்ளி காவல் நிலையத்திற்கு கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து சோதனை நடத்தினர். ‌அதில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவன் பிடி படாமல் இருக்க மிளகாய் பொடி தூவி சென்றுள்ளான். அதே போல் சிசிடிவியில் சிக்காமல் இருக்க கோமராவை திருப்பி வைத்து திருடியதும் தெரிய வந்துள்ளது. 

துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - மதிமுக அவைத்தலைவர் அதிரடி

மேலும் சம்பவ இடத்தில் டி‌.எஸ்.பி ராஜபாண்டியன், வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, உள்ளிட்டவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சென்ற வருமானவரித்துறை அதிகாரி அவசர அவசரமாக கோவை வந்து சுமார் 50 சவரன் நகை கொள்ளை போனதை உறுதி செய்தார்.‌ உயர் அதிகாரி வெளியூர் சென்ற அன்று இரவே வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!