கோவை மாவட்டம் காரமடை அருகே கள் குடிக்கச் சென்ற நபர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் சட்ட விரோதமாக தென்னங்கள் இறக்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிக்க காளியூர் பகுதியை சேர்ந்த ஆதிவாசி இளைஞர் ஜெயக்குமார்(34) அவரது நண்பர்கள் சிலருடன் இருசக்கர வாகனத்தில் குப்புசாமி தோட்டத்திற்கு செனறுள்ளனர்.
அப்போது இவருடன் கள் குடிக்க வந்த சக நண்பர்கள் அளவான போதையுடன் வீடு திரும்பி உள்ளனர். ஆனால் ஜெயக்குமார் மட்டும் போதை அதிகமானதால் தன்நிலை மறந்து அங்கேயே படுத்துள்ளார். இதனிடையே இந்த பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விவசாயி குப்புசாமி மின்வேலி அமைத்திருந்தார். இரவு நேரமாகியதால் குப்புசாமி காட்டுயானைகள் விளைநிலத்திற்கு நுழையாமல் இருக்க வேலியில் மின்சாரத்தை செலுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கோர விபத்து; பேருந்து மீது மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
இதையடுத்து போதை தெளிந்த ஜெயக்குமார் போதை தெளிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக போதையில் இருசக்கர வாகனத்தில் குப்புசாமி தோட்டத்தின் வழியே சென்றுள்ளார். அப்போது தோட்டத்தின் நுழைவு வாயிலில் காட்டுயானைகள் வருவதை தடுக்க வைத்திருந்த மின்வேலியின் மீது விழுந்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்து மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த சிலர் மின் வேலியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தோட்ட உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
ராணிபேட்டையில் பயங்கரம்; தாய், 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
இது தொடர்பாக காரமடை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை காவல் துறையினர் குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.