பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பெயரில் மோசடி; கோவையில் பாஜக பிரமுகர் மீது பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Apr 22, 2024, 6:07 PM IST

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உங்களுக்க வீடு வாங்கி தருவதாகக் கூறி பாஜக பிரமுகர் மீது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இரு பெண்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த மினாகுமாரி மற்றும் இரு பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், வினோத் என்பவர் தான் பாஜகவில் உறுப்பினாராக இருக்கிறேன் என்றும் மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கி தருகிறேன் என்று கூறி தாங்கள் உட்பட பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அப்பெண்கள் கூறுகையில், தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எங்கேனும் அரசு குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்குமா  என்று பார்த்து கொண்டிருந்த போது வினோத் தன்னை பாஜக.வில் இருக்கிறேன் என்று கூறி அறிமுகமானார். மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று கூறியதாகவும் ஏற்கனவே தங்களால் பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணத்தை காண்பித்ததாக தெரிவித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

என்னை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; அரசியல் கட்சிகளுக்கு விஷால் கொடுத்த மெசேஜ்

மேலும் அவர் கட்சியில் இருக்கிறேன் என்று கூறியதாலும், ஏற்கனவே பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணங்களை காண்பித்ததாலும் அதனை நம்பி, தாங்கள் தங்களால் இயன்ற பணத்தை 1 லட்சம், 50 ஆயிரம் என்று தந்ததாகவும் தற்போது அந்த பணத்தை எல்லாம் பெற்று கொண்டு வீடுகளை ஒதுக்கீடு செய்து தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர். 

ரீ ரிலீசாகும் படத்திற்கு வரும் கூட்டம் கூட வாக்களிக்க வருவதில்லை; இயக்குநர் ஹரி வருத்தம்

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வினோத்தை நேரடியாக காவலர்கள் முன்பு நிறுத்தியும் FIR பதிவு செய்யாமல் CSR  மட்டுமே வினோத் மீது பதிவு செய்ததாக தெரிவித்தனர். தற்போது அந்த வினோத் திடம் பணத்தை கேட்டு சென்றால் எப்போதும் வீட்டில் இல்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே வினோத் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என அப்பெண்கள் கேட்டுக் கொண்டனர்.

click me!