கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Apr 20, 2024, 7:27 AM IST

கோவை மக்களவைத் தொகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.


கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத்தலைவருமான அண்ணாமலை வாக்குச்சாவடிகனை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கணவருக்கு ஒரு இடத்திலும், மனைவிக்கு ஒரு இடத்திலும் வாக்கு இருக்கிறது. சில இடங்களில் ஒருவருக்கு இருக்கிறது. மற்றவருக்கு இல்லை. ஒரே வாக்குச்சாவடியில் 830 பேரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த முறை திட்டமிட்டு ஒரு லட்சம் பேரின் வாக்குகள் நீக்ககப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் என்ன வேலை பார்த்து இருக்கிறது என தெரியவில்லை. ஒன்று, இரண்டு என இருந்தால் பிரச்சனை இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான  வாக்குகள்  அழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் தாண்டி மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல்லடம், சூலூர், கோவை என அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது.

Tap to resize

Latest Videos

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்; கள்ள ஓட்டு போட வந்த மர்ம நபர்கள் விரட்டி அடிப்பு

என்ன லாஜிக்கில் அப்படி செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை. ஓரே இடத்தில் பல வாக்காளர்கள் நீக்கப்பட்ட  இடங்களில் மறுவாக்குப் பதிவு கேட்டிருக்கிறோம். வயதானவர்களுக்கு போக்குவரத்து வசதி கொடுக்கபடவில்லை. வாக்கு இல்லாதவர்கள் அனைவரும் படித்தவர்கள். மாலை 6 மணி வரைக்கும் வாக்கு பதிவு செய்யலாம். 6 மணிக்கு வருபவர்களுக்கு  டோக்கன் கொடுத்து ஏழு மணி வரை வாக்கு பதிவு  நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்தும் சரியான பதில் இல்லை. ஒரு பூத்துக்கு 20 ஓட்டுகளுக்கு மேல் நீக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு இருப்பதில்  அரசியல் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. பெரும்பாலும் பாஜகவில் இருந்து வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நேர்மையான முறையில் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு இவற்றை கவனப்படுத்தி கொண்டு செல்ல இருக்கிறோம்.

என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை

தெப்பக்குளம் பகுதியில் ஒரு இடத்தில் இருநூறு ஓட்டு நீக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆவணப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு லட்சம் வாக்காளர்களை கணக்கிடும் பணி என்பது பெரிய அளவில் இருக்கிறது. கணவருக்கு வாக்கு இருக்கிறது மனைவிக்கு வாக்கு இல்லை. அப்படி பல இடங்களில் வாக்கு இல்லாமல் இருக்கிறது. பெரிய அளவில் எல்லா பூத்களிலும் இதே நிலை தான். இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஆகி  வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

click me!