அந்த கைல மை வச்சாச்சி, நீங்க இந்த கைல வைங்க; வாக்காளரின் பதிலால் அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள் - கோவையில் பரபரப்

By Velmurugan s  |  First Published Apr 20, 2024, 5:11 PM IST

கோவையில் இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்த நபரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தமிழகம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 52). இவர் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி,  நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி பூத் எண் 145ல் வாக்களிக்க சென்ற போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்துள்ளார். 

சிவகங்கையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா; மழை வேண்டி வினோத வழிபாடு

Tap to resize

Latest Videos

undefined

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் இடது கை ஆள்காட்டி விரலை பார்க்கும் பொழுது அவர் ஏற்கனவே ஓர் இடத்தில் வாக்களித்துவிட்டு இரண்டாவது முறையாக இங்கு வாக்களிக்க வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   புகாரின் பெயரில்    திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர். 

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா; முதல் முறையாக செங்கோலை பெற்ற பெண் அறங்காவலர்

அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருந்ததாகவும் காந்திபுரம் பகுதியில் வாக்களித்து விட்டு நல்லாம்பாளையம் வந்ததாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் மீது 171(D) மற்றும் 171 F(2) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலிசார் பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.

click me!