VAO Suicide: திருமணமாகாத விரக்தியில் VAO தற்கொலை? கோவையில் பரபரப்பு

திருமணமாகத விரக்தியில் கிராம நிர்வாக அலுவலர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொள்ளி மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி (39) என்பவர் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான கூள நாயக்கன்பட்டியில் உள்ள அவர் வீட்டில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொள்ளி மாத்திரையை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிவனை தரிசிக்க வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு; கோவையில் தொடரும் சோகம்

Latest Videos

இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கருப்புசாமி கடந்த சில மாதங்களாக ஆஸ்துமா, மற்றும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், மேலும் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

சாதி பார்த்து திருட்டு பழியா? பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்தது குற்றமா? பாதிக்கப்பட்ட பெண் குமுறல்

இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கருப்புசாமி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!