தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி - வேல்முருகன்

By Velmurugan s  |  First Published Jun 15, 2024, 6:05 PM IST

தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை கொடிசியாவில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக நீதி கோட்பாடு அடிப்படையில் துவங்கப்பட்ட இயக்கமான பாமக தொடர்ந்து தோல்விகளை தழுவுவது எதிர்காலத்தில் சமூக நீதி குறித்த ஒரு கேள்வி உருவாகும் என்பதாக தான்  கருதுவதாகவும். 

அரசியலில் ஆயிரம் மாட்சியங்கள்  இருந்தாலும் சமூகநீதி தளத்தில் பணியாற்றுகின்ற எங்களைப் போன்றவர்களுக்கு அந்த உண்மையான சமூக நீதியை எடுத்து மக்களிடத்தில் சொல்லி அனைத்து சமூக மக்களின் வாக்குகளை பெற்று சமூக நீதி கோட்பாடு தத்துவத்தின் அடிப்படையில் எப்போதும் அரசியலில் நீடிக்க வேண்டும் என்பதுதான் தனது விருப்பம். 

Tap to resize

Latest Videos

சிறுமுகை வனச்சரகத்தில் பெண் புலி மர்ம மரணம்; கோவை வனத்துறை அதிகாரிகள் விசாரணை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  என்றாலே ஆளுகின்ற அரசியல் கட்சி வெற்றி பெறுவது தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலம் இருந்து வருகின்ற உண்மை என்றாலும் இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ச்சியாக மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியும் மக்களின் அன்பையும் பெற்றிருக்கிற காரணத்தினாலும் வலுவான ஒரு கூட்டணியை தொடர்ச்சியாக மூன்று பொது தேர்தலில்  மகத்தான வெற்றியை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டிருப்பதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். 

நடந்து முடிந்த தேர்தலில் பண பலம், அதிகார பலம் வெற்றி பெற்றிருப்பதாக கூறும் எதிர்கட்சிகளின் கருத்துகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எப்போதுமே தோல்வியை தழுவுகின்றவர்கள் பணபலம், ஆள்பலம் என்று சொல்வார்கள். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்கள் வாக்களிக்காமல் வெற்றி பெற முடியாது. மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் தமிழக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்கான சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அமைச்சர் நேருவின் ஆதிக்கத்தால் தனக்கு தானே மரண செய்தியை தெரிவித்த திமுக எம்எல்ஏ; திருச்சியில் பரபரப்பு

பல்வேறு அறிவு சார்ந்த தளத்தில் இந்த அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி இருப்பதற்காக கிடைத்த அங்கீகாரம் மற்றும் கூட்டணி கட்சியினுடைய தொண்டர்களின் கடினமான உழைப்பும் சேர்ந்து கிடைத்த வெற்றி தான் இந்த மகத்தான வெற்றி. இதேபோல் திமுக வுடன் இணைந்து மூன்று தேர்தலை சந்திக்கிறோம். தொடர்ந்து இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்களுக்கான பங்கினை கொடுத்து முதலமைச்சர் அழைத்துச் சென்றிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று நம்புகிறேன். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த சமூகங்களுக்கான உண்மையான எண்ணிக்கை அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வேலை வாய்ப்பு, உரிமை பறிக்கப்படுகிறது. தொழில், வணிக வளம் தமிழர்களிடம் இருந்து தட்டிப் பறிக்கப்படுகிறது. 

இதில் தமிழ்நாடு அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு சமூகநீதி கிடைக்க சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  அவர்களும் சமூக நீதி அரசராக நடத்துகின்ற இந்த அரசு உடனடியாக சமூகநீதி காக்கின்ற வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என்றும் இந்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் கண்டிப்பாக முதலமைச்சர் இதனை செய்வார் என்றும் குறிப்பிட்டார்.

click me!