கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பெண் புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் வனப்பகுதியை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியாக சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட உளியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
undefined
அப்போது அங்கு 9 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் இறந்த பெண் புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் இறந்த பெண் புலி ஆண் புலியோடோ அல்லது வேறு ஏதோ ஒரு காட்டு விலங்குடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். முழு அறிக்கைக்கு பின்பு புலியின் இறப்பு குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.