கோவையில் பெண் காவலர் எனக்கூறி பலரிடமும் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை அவருது ஆண் நண்பருடன் சேர்த்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் பழைய இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் தினேஷ் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனம் ஒன்றை அம்பிகா வாக்கி உள்ளார். இருசக்கர வாகனத்தை வாங்கும் பொழுது தான் பெண் காவலர் எனக்கூறி காவல் துறை அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார்.
ஓட்டை, உடைசலுடன் அரசுப் பேருந்துகள்; பெண்களுக்கு இலவச பயணம் என்ற பெயரில் உயிருக்கு உலை வைக்கும் அரசு
undefined
இருசக்கர வாகனத்தை வாங்கியதற்கு முறையாக EMI செலுத்தாமல் இருந்த நிலையில், வாகனத்தை விற்ற தினேஷ் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தார். அப்போது அம்பிகா என்ற பெயரில் பெண் காவலர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் வாகன விற்பனையாளர் தினேஷ் புகார் அளித்தார்.
அழகிகளின் புகைப்படங்களை வைத்து தொழில் அதிபர்களுக்கு வலை; டேட்டிங் ஆப்பால் வந்த பகீர் சம்பவம்
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி பெண் காவலர் அம்பிகாவையும் அவரது நண்பர் ரகு என்பவரையும் கைது செய்தனர். காவல்துறை உடை அணிந்து பலரையும் பெண் போலீசார் என கூறி அம்பிகா பலரையும் ஏமாற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் செல்வபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.