Mk Stalin:முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

By Velmurugan s  |  First Published Jun 15, 2024, 12:51 PM IST

கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை சென்றடைந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் நிறைவாகவும், 40 தொகுதிகளிலும் வெற்றியை சாத்தியமாக்கிய முதல்வர் ஸ்டாலினை பாராட்டும் விதமாகவும் திமுக சார்பில் முப்பெரும் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் நேருவின் ஆதிக்கத்தால் தனக்கு தானே மரண செய்தியை தெரிவித்த திமுக எம்எல்ஏ; திருச்சியில் பரபரப்பு

Tap to resize

Latest Videos

அதன்படி கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். 

Vellore: டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் - வேலூரில் பரபரப்பு

இந்த  விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். முன்னதாக விமான நிலையத்திற்குள் அவரை அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மதிவேந்தன், இளித்துறை ராமச்சந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆ ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அங்கு திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

click me!