பெண்ணில் வயிற்றில் 36 கிலோ எடை கொண்ட கட்டி! - கோவை மருத்துவர்கள் அகற்றி சாதனை!

By Dinesh TG  |  First Published Jun 17, 2023, 4:21 PM IST

இந்திய அளவில் அரிய அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை. படைத்துள்ளனர். பெண்ணின் வயிற்றிலிருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை கொண்ட ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டி நுட்பமான அறுவைசிகிச்சையில் அகற்றம் செய்துள்ளனர்.
 


நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வலியினால் அவதிப்பட்டு இருக்கின்றார்.பின்னர் வயிறு வீக்கம் பெரிதாகி, மூச்சு விட முடியாமலும் திணறியதை தொடர்ந்து, அவர் ராமநாதபுரம் அருகே உள்ள வி.ஜி.எம் கேஸ்ட்ரோ மற்றும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது அவரை சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்ரோலஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் வயிறு பகுதியில் பரிசோதித்து ஸ்கேனில் பார்த்த போது, தமிழ் செல்வியின் வயிற்றில் ராட்சச கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது. சினைப்பகுதியில் உருவான இந்த கட்டி, நுரையீரல், குடல், சிறுநீரகம், ரத்த நாளங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை அழுத்திக்கொண்டிருந்தன.

இந்த நிலையிலே சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்ராலஜிஸ்ட் துறை தலைவர் டாக்டர் கோகுல் தலைமையில் கேஸ்ட்ரோ துறை, சிறுநீரக துறை, ரத்த நாள துறை, மயக்கவியல் துறைகளை சார்ந்த நிபுணர்களுடன் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், தமிழ் செல்வியின் வயிற்று பகுதியிலிருந்த 36 கிலோ அளவிலான ராட்சத ஒவேரியன் கேன்சர் கட்டி அகற்றப்பட்டது. அந்த கட்டியின் எடை, உடல் குறைபாடுடன் வந்த தமிழ் செல்வியின் உடல் எடையில், சரி பாதி எடையாகும்.



தற்பொழுது நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வருகிறார். இந்திய அளவில் உடல் குறைபாடுடன் வந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது இந்திய அளவில் இது இரண்டாவது முறை.

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 கிலோக்கு மேல் எடையுடன் கூடிய கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் வி. ஜி. எம். மருத்துவமனை மருத்துவர்கள் செய்த இந்த ஆபரேசன் இந்திய அளவில் இரண்டாதாகவும், தமிழ்நாடு அளவில் முதலாவது பெரிய கட்டி அகற்றும் ஆபரேசன் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள், 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Latest Videos

click me!