Agri Rank list | வேளாண் பல்கலை இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

By Dinesh TG  |  First Published Jun 16, 2023, 8:01 PM IST

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 2 மாணவிகள் உட்பட 3 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
 


2023-24ம் கல்வியாண்டு முதல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொதுவான இணையதள விண்ணப்பம் மூலம் இளமறிவியல் பட்டப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

இந்த கனல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு 2555 இடங்கள் மற்றும் இணைப்பு கல்லுக்குறிகளுக்கு 2806 இடங்கள் என மொத்தம் 5361 இடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக கடந்த மே 10 ஆம் தேதி துவங்கி கடந்த 9 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இளமறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 41 ஆயிரத்து 434 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 36 ஆயிரத்து 612 பேர் தரவரிசைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதாகவும், இதே போல நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல் அங்கு தனியாக வெளியிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய அளவில் வேளாண் சார்ந்த படிப்புகளில் பெண் பிள்ளைகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாகவும், தமிழகத்தில் கூடுதலாக 70:30 என்ற அடிப்படையில் இந்த ஆர்வம் உள்ளதாக கூறியவர், வேளாண் படிப்புகளுக்கு மாணவர் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுடன், இந்தாண்டு தரமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் விண்ணப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தவர்,

ஜூன் மாதம் 3 வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூலை கடைசி வாரத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்படும் என்றார்.

Latest Videos

click me!