கல்வி உதவித்தொகை தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி - காவல்துறை எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jun 17, 2023, 3:33 PM IST

கோவையில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயிலக்கூடிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேவைக்காக கல்லூரியில் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்தநிலையில் மாணவர்களில் பெற்றோர்களுக்கு அரசு லோகோவை வைத்துக்கொண்டு மர்ம நபர்கள் வலைவீசி உள்ளனர். ஸ்காலர் சிப் பணத்தை தருவதாக கூறி தொடர்ந்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பேசியுள்ளனர். 

Latest Videos

undefined

மாணவர்கள் பயின்ற பள்ளி மற்றும் கல்லூரிகள் அதே போல பெற்றோரின் பெயர் என அனைத்து தகவல்களையும் சேகரித்து அவர்களிடம் தெளிவாக பேசியுள்ளனர். அனைத்து தகவல்களையும் சரியாக சொன்னத்தை நம்பியும் அரசு லோகோவை நம்பியிம்  மர்ம கும்பல் கேட்ட பணத்தை அவர்கள் அனுப்பிய QR கோடு மூலம் அனுப்பிள்ளனர்.

அவர்கள் பணத்தை அனுப்பிய உடன் அந்த QR  கோடு 5 கோடுகளாக பிரிந்து உடனடியாக பெற்றோர்களின் வங்கிகணக்கில் இருந்த பணத்தை அடுத்த சில நொடிகளுக்குள் திருடியுள்ளனர். ஒவ்வொரு நபரிடமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உதவித்தொகை வரும் என்று கூறி 2 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் வரை வாங்கியுள்ளனர்.

தண்ணீருக்கு பதிலாக ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

இதனையடுத்து பணம் குறித்து மட்டுமே அவர்கள் தொடர்ந்து அலைபேசியில் பேசியதாகவும், பணத்தை அனுப்புகிறேம் என்று சொன்ன தேதிக்கு பணத்தை அனுப்பாததால் சந்தோகம் அடைந்த பெற்றோர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார் : அப்போது அவர் கூறுகையில், புலன் விசாரணையில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றபட்டதாக தெரியவருகிறது. 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் விவரங்களை சேகரித்து வாட்ஸ்ஆப் கால் மூலம் பேசுகின்றனர்.

அரசு எம்பளத்தை பயன்படுத்தி நம்பக்கூடிய வகையில் நயமாக பேசுகின்றனர். தொடர்ந்து தொடர்பை துண்டிக்காமல் பேசும்போது கியூ ஆர் கோடை அனுப்புகின்றனர். அதை ஸ்கேன் செய்தவுடன் அந்த வங்கி கணக்கு விவரங்கள் சேகரிக்கபடுகிறது. நம்பக்கூடிய வகையில் ஒரு வங்கி கணக்கை கூறுகின்றனர். பணம் வரும் என எதிர்பார்க்கும் வேலையில் பணம் திருடபடுகிறது. கோவையில் இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.

குடித்துவிட்டு மனைவிடம் அடிக்கடி தகராறு; 18 இடங்களில் வெட்டி படுகொலை செய்த இளம் பெண்ணின் சகோதரர்

படிப்பறிவில்லாத ஏழை மக்களை குறிவைப்பதால் அதற்கேற்ற வகையில் பணத்தை மோசடி செய்கின்றனர். 44 செல்போன்கள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 22 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களது பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் நாமக்கல் மாவடத்தை சேர்ந்தவர்கள். அவ்வளவாக படிக்காதவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் டெல்லியில் இருக்கிறார். டெல்லியில் தங்கியிருந்து கற்றுக்கொண்டு, அங்குள்ள தொடர்புகளை கொண்டு சிம்கார்டுகளை வாங்கி இருக்கின்றனர். எந்தவித தடயமும் இல்லாமல் இருந்த வழக்கில் தகவல்களை சேகரித்து மொத்த கும்பலையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

click me!