அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது தமிழகத்தில் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை

By Velmurugan s  |  First Published Jan 8, 2024, 1:50 PM IST

அயோத்தியில் ராமர்கோவில் கும்பாபிஷேகத்தின் போது தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்ப வந்திருந்த  இவ்வியக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ராமர் சிலை மற்றும் பதாகைகளை எடுத்து வந்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

கோவை பேஷன் ஷோவில் விஜயகாந்திற்காக ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்; வியந்து பார்த்த ஏற்பாட்டாளர்கள்

Tap to resize

Latest Videos

undefined

இது குறித்து லோட்டஸ் மணிகண்டன் கூறுகையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் தயாராகி வருகின்றனர். பல்வேறு மக்களும் நேரில் செல்வதற்கு தயாராக உள்ளனர். அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும், நேரலையில் காண்பதற்கும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்

இதனால் தமிழக அரசு அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் மெக்கா, ஜெருசலேம் போன்ற தளங்களுக்கு செல்வதற்கு சலுகைகள் அளிக்கப்படுவது போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கும் மாநில அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

click me!