பண்ணாரி மாரியம்மன் தாலிக் கயிறு அறுந்து விழுந்ததாக பரவிய தகவலையடுத்து கோவையில் பெண்கள் திடீரென்று விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. பொதுவாகவே கொங்குமண்டலத்தை பொறுத்தவரை எல்லை காவல் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் அதிகமாகவே போற்றி வணங்குவார்கள்.
அந்த வகையில் சத்தி பண்ணாரி மாரியம்மன் புகழ் கொண்ட பெண் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. வனம் ஆளும் தேவதையாக இருக்கும் பண்ணாரி மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கயிறு அறுந்து கீழே விழுந்ததாக திடீரென தகவல் பரவியது. இதனால், கோவையில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
மாலத்தீவு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள்: இதுதான் காரணம்!