கோவை மதரீதியான உணர்வு மிக்க நகரம்; பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது - காவல்துறை விளக்கம்

By Velmurugan sFirst Published Mar 15, 2024, 5:09 PM IST
Highlights

கோவையில் வருகின்ற 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்த சாலை பேரணி நிகழ்ச்சிக்கு மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. பிரதமர் மோடியோ தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி திருப்பூர், கோவை, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் வருகின்ற 18ம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார். அப்போது கோவை மேட்டுப்பாளையம் சாலை முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை ரோட் ஷோ என்று சொல்லக் கூடிய காரில் இருந்தபடியே மக்களை சந்தித்தவாறு பயணிக்க பாஜக சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

கரூரில் கஞ்சா விற்பனையில் பள்ளி மாணவர்கள்; கதி கலங்கி நிற்கும் பெற்றோர்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் வரை இந்த ஆலோசனையானது நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின்னர் பிரதமரின் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ள பகுதியானது பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அதே போன்று அப்பகுதியில் போக்குவரத்தும் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு இடையூறாக அமையும்.

மேலும் தமிழகத்தில் தற்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் இந்த நிகழ்ச்சியால் மாணவர்கள் தேர்வுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக பிரதமரின் பாதுகாப்புக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளன. சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் கூடும் ஒவ்வொரு தனிநபரையும் சோதனை செய்வது மிகவும் கடினம்.

இனி பிரதமர் மோடி பேசுவதை தமிழிலேயே கேட்கலாம்.. AI உதவியுடன் புதிய வசதியை அறிமுகம் செய்த பாஜக..

கோவை மத ரீதியிலான உணர்வு மிக்க நகரம். தற்போது வரை எந்தவொரு அரசியல் மற்றும் அரசியல் அல்லாத தலைவருக்கும் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடத்தி மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை” உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்பாஜக மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் பிரதமருக்கு பாதுகாப்பு வேண்டுமென காவல் ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!