கோவையில் உணவகத்தை அபகரித்து பா.ஜ.க சேவை மையம் அமைத்த விவகாரம்: 6 பேர் மீது வழக்குப் பதிவு

By Velmurugan s  |  First Published Jun 8, 2023, 2:17 PM IST

கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 47). இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளராக இருந்தார். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி புகார் மனு அளித்தார். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், பழைய சோறு டாட்.காம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் வழங்கும் கடை நடத்தி வருகிறேன். சாயிபாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் எனது பணிகளுக்காக கட்டடத்தை வாங்கினேன். எழுத்து பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.‌ கட்டடத்தை சீரமைக்க நான் பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். இதற்கிடையே பழனிச்சாமிக்கும் எனக்கும் வாடகை, ஒப்பந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நான் பா.ஜ.க.,வில் இருப்பதால், பழனிச்சாமி, மாநில தலைவர் அண்ணாமலையிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். அவர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மற்றும் சிலரை அனுப்பி கட்டடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டினார். எனக்கு தெரியாமல் நான் இருந்த கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆட்களை வைத்து அபகரித்து சென்று விட்டனர். மேலும் நான் பயன்படுத்தி வந்த கட்டடத்தை இப்போது பா.ஜ.க.,வின் கொடி கட்டி, சேவா மையம் என போர்டு வைத்து உள்ளனர். இதுகுறித்து கேட்டால், உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. எதுவாக இருந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசிக்கொள் என என்னை மிரட்டி வருகின்றனர். அண்ணாமலை, உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். 

“எங்க ஏரியா உள்ள வராத” காட்டுக்குள் சென்ற நபரை துரத்தியடித்த யானை; தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பயணி

இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 13 நாட்களுக்கும் மேலாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அண்ணாதுரை  கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் சந்தித்து மீண்டும் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.

கல்யாணத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த நண்பர்கள்; மணமகன், மணமகள் வீட்டார் பயங்கர மோதல் 

இதையடுத்து  சாய்பாபா காலனி காவல் துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், உணவகத்தை அபகரித்து கட்சி போர்டு வைத்து, கொடி கட்டிய விவகாரம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் பழனிசாமி, அவரது மகள் பிருந்தா, பா.ஜ.க.வை சேர்ந்த குமரன், செந்தில், கோபி, துரைபாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது  மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!