Coimbatore Rain: 115 கோடியில் கட்டப்பட்ட பாலம்; மழைநீர் வடிய வழி இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

By Velmurugan s  |  First Published May 9, 2024, 2:27 PM IST

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த ஓரிரு நாட்களாக பெய்து வரும் கோடை மலையால் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் குளம் போல் காட்சி அளிக்கிறது.


கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டன. இந்த பாலங்கள் அனைத்தும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன.  

கோவையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள்; ஒவ்வொரு ஆலையாக சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள்

Tap to resize

Latest Videos

இதில் பெரியநாயக்கன்பாளையத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் எல் எம் டபிள்யூ பிரிவு முதல் வீரபாண்டி பிரிவு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. அதில் பாலத்தின் முடிவில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால் அங்கு சாலை குறுகி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

அண்ணன் என நம்பி வந்த சிறுமி; மனநலம் பாதித்தவர் என்றும் பாராமல் காமுகன்கள் செய்த கொடூர செயல்

மேலும்  முறையான திட்டமிடல் இல்லாமல் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், வடிகால் வசதிகள் செய்யப்படாமல் கட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஓரிரு நாட்களாக காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள  பாலத்தின் மீது மழை நீர் குளம் போல தேங்கி இருக்கிறது. கோடை மழைக்கே நீர் தேங்குகிறதென்றால், பருவமழையில் இந்த பாலம் எந்த நிலையில் இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேம்பாலத்தில் குளம் போல காட்சி அளிக்கும் மழைநீர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!