கோவிட் பெருந்தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வரும் நிலையில் கோவை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை நோய் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் பொதுவாக 2 % நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக மருத்துவ அலுவலர் சுகாதார ஆய்வாளர், ஆய்வக நுட்புனர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து நோய் கண்காணிக்கும் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்வார்கள்.
மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்தை பூஸ்டர் டோசாக பயன்படுத்த அரசு அனுமதி
undefined
இதில் நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு Facility Isolation Centerக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற பயணிகள் வீட்டில் தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவேண்டும். சுய கண்காணிப்பின் போது நோய் அறிகுறி தெரியவந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 1075 என்ற எண்ணில் பயணிகள் தெரிவிக்கவேண்டும்.
வெளி நாட்டிலிருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. RTPCR பரிசோதனையில் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரி மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம் அணிதல், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், இருமல் தும்மல் ஆகியவை இருக்கும் பொழுது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடிக்கொள்ளுதல் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் .ஜி.எஸ்.சமீரன்அவர்கள் தெரிவித்துள்ளார்.