டிக் டிக் டிக்… பயந்துட்டியா மல… இணையத்தில் வைரலாகும் திமுகவினரின் போஸ்டர்!!

By Narendran S  |  First Published Dec 23, 2022, 11:53 PM IST

கோவையில் திமுகவினர் வாட்ச் புகைபடத்துடன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கோவையில் திமுகவினர் வாட்ச் புகைபடத்துடன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாட்ச் குறித்து பேசியது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச்சை வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் அண்ணாமலை கட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி… கோவை விமான நிலையத்தில் ஐசலேஷன் ரூம்… செந்தில்வளவன் விளக்கம்!!

Tap to resize

Latest Videos

வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை தொடங்கும்போது, வாட்ச் பில், சொத்து, வருமான விவரங்கள் அனைத்தையும் வெளியிடுகிறேன் என்று தெரிவித்ததோடு, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்களை திரட்டி வருகிறேன், விரைவில் வெளியிடுவேன் எனக் கூறினார். 

இதையும் படிங்க: விவசாயிகளின் விருப்பத்தை மீறி எந்த திட்டமும் கொண்டு வரப்படாது… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!!

இந்த நிலையில் கோவை லங்கா கார்னர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் டிக்!! டிக்!! டிக்!! பயந்துட்டியா மல!! என்ற வாசகத்துடன் வாட்ச் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரின் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாட்ச் குறித்து சமூக வலைதளங்களில் மிக வைரலாக பேச விட்டு வரும் சூழலில் கோவை மாவட்ட திமுகவினர் மீம்ஸ் போன்ற போஸ்டரை  ஒட்டியது பரபரப்பக பேசப்பட்டு வருகிறது. 

click me!