கொரோனா எதிரொலி… கோவை விமான நிலையத்தில் ஐசலேஷன் ரூம்… செந்தில்வளவன் விளக்கம்!!

By Narendran S  |  First Published Dec 23, 2022, 11:06 PM IST

கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், ரேன்டம் அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் தெரிவித்துள்ளார். 


கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், ரேன்டம் அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை விமான நிலையத்திற்கு இரண்டு சர்வதேச விமானங்கள் வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் முறையில் அவர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்.

இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு... உத்தரவிட்டது தமிழக அரசு!!

Latest Videos

சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் 400 பேர் சராசரியாக கோவை வருகின்றனர். விமானத்தில் வரும் 2 சதவீத பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றது. நேற்று இரவு முதல் சர்வதேச விமானத்தில் வரும் பயணகள் சோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர். இது வரை யாருக்கும் அறிகுறிகள் இல்லை. மொத்தம் 22 விமானங்கள் உள்நாட்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்க சுகாதாரத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். விமான நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமிநாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் - அன்றே கணித்தார் கருணாநிதி!

விமான நிலையத்திலேயே ஐசலேஷன் ரூம் தயார் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையாக அறை தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின் பெயரில் பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. சளி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசியால் பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சுழற்சி முறையில் பணியாளர்கள் விமான நிலையத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

click me!