Coimbatore : தமிழக அரசு தலையிட்டே ஆகணும் - ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

Published : Dec 23, 2022, 10:42 PM IST
Coimbatore : தமிழக அரசு தலையிட்டே ஆகணும் - ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

சுருக்கம்

கோவை, சூலூரில் அமைக்கப்பட உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

கோவை மாவட்டம், சூலூர் பகுதிக்கு உட்பட்ட வாரப்பட்டி ஊராட்சியில் டிட்கோ சார்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக வருவதாக கூறி அப்பகுதி மக்கள் பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதியில் சிட்கோ அமைக்கப்படுவதாக கூறிய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி சிட்கோ திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அதே இடத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் கூடம் அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே தனியார் இடத்தில் பந்தல் அமைத்து அப்பகுதி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க..காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!

இந்நிலையில், ஒன்பதாவது நாளாக வாரப்பட்டியில்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

பஞ்சாபில் இருந்து ஆஜாத் கிசான் சங்கர்ஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு கோல்டன் என்கின்ற ராஜேந்தர் சிங் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு நேரில் வந்து ஆதரவை தெரிவித்துள்ளார்.மேலும், தமிழக அரசு இந்த போராட்டத்தை கைவிடாவிட்டால், காத்திருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கப் போவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க..கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் - அன்றே கணித்தார் கருணாநிதி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?