கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வாகன பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், பேரணி நடைபெறவுள்ள பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வருகின்ற 18ம் தேதி கோவையில் வாகனப் பேரணியாக சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு வாகன பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி பேரணி்கு அனுமதி வாங்கியுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகர காவல் துறை பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பிரதமரின் தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை பிரிவினரான எஸ்பிஜி குழுவினர் வாகன பேரணி நிகழ்ச்சி நடைபெற உள்ள சாய்பாபா காலனி பகுதி முதல் ஆர் எஸ் புரம் வரை உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாநகர காவல் துறையிடம் இணைந்து திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
புதுவை மயான கொள்ளை விழா; 1 கி.மீ. நடந்து சென்று தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி
இந்த நிலையில் தற்போது வாகன பேரணி நடைபெற உள்ள பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டு கோவை மாநகர காவல் துறை மற்றும் மத்திய உளவுப் பிரிவு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அடங்கிய குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையும், மத்திய உளவு பிரிவும் ஈடுபட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தான் தற்போது அந்த பகுதியில் பிரதமரின் தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.