கோவையில் செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு… வெளியான அதிர்ச்சி வீடியோ!!

By Narendran S  |  First Published May 17, 2023, 11:08 PM IST

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு கடை ஊழியர் அருகே சென்ற பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு கடை ஊழியர் அருகே சென்ற பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேனீர் கடை போன்ற கடைகள் உள்ளன.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Latest Videos

அதில் செல்போன் கடை ஒன்றின்குள் புகுந்த சுமார் 5 அடி சாரைப்பாம்பு, செல்போன் ரேக் வழியாக நகர்ந்து, கடையில் அமர்ந்திருந்த பணியாளரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நெளிந்துள்ளது. அப்போது சுதாரித்துக் கொண்ட பணியாளர் பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் ஓடினார்.

இதையும் படிங்க: கோவையில் கொட்டித்தீர்த்த மழை... வெப்பம் தனிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

இதையடுத்து அந்த பாம்பு செல்போன் கடைக்குள் இருந்த ஓட்டை வழியாக வெளியே சென்றது. இந்த நிலையில் செல்போன் கடை ரேக் வழியாக பாம்பு நகர்ந்து செல்வதும், கடையின் ஊழியர் அதிர்ச்சியில் ஓடுவதும் போன்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

click me!