கோவையில் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி

By Velmurugan s  |  First Published May 17, 2023, 11:34 AM IST

கோவை அருகே மத்திய அரசின் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வட மாநில  ஆராய்ச்சி மாணவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்று விக்கப்படுகிறது. இம்மையத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். அதே சமயம் இது யானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகவும் உள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல்(வயது 23) என்பவர் நேற்றிரவு நிறுவன வளாகத்திற்குள் உணவு அறுந்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை விஷாலை தாக்கியுள்ளது. இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் விஷாலை மீட்டு உடனடியாக கேரள மாநில எல்லைக்குட்பட்ட கோட்டைதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

Latest Videos

undefined

சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை கொலை செய்த தம்பி, தங்கை உட்பட 9 பேர் கைது

விஷாலுக்கு மார்பெலும்பு முறிவு, வலது கால் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீதியிருக்கும் காலத்திலாவது மக்களுக்கு நல்லது செய்யுங்கள் - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் அறிவுரை

தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து  தடாகம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இண்டர்ன்சிப் பயிற்சிக்காக சலிம் அலி பயிற்சி மையத்திற்கு வந்து ஏழு நாட்களே ஆன நிலையில் ஆராய்ச்சி மாணவர் யானை தாக்கி உயிரிந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

click me!