கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் வீட்டின் காவலாளியை ஒரு கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகா சபா தென் பாரத ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான கே சுபாஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில் 14ம் தேதி இரவு அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சுபாஷ் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வரும் கதிர்வேல்(வயது 68) என்பவரை சாரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் அவருக்கு முகம், நெஞ்சு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல் துறையினர் காவலாளி கதிர்வேலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை தாக்கியதாக சந்தேகிக்கும் மர்ம நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை ஆசாமியின் சாகசத்தால் டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்து; பொதுமக்கள் அவதி
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராயும் போது காவலாளி கதிர்வேலை தாக்கியது பதிவாகி உள்ளது. இதுகுறித்து மேலும் காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் சுபாஷின் 2 கார்களை தீ வைத்த எரித்தும், அவரது வீட்டில் இருந்த வெளிநாட்டு நாயை மருந்து வைத்து கொலை செய்தும், சுபாஷை ஒரு முறை தாக்க முயன்றது உள்ளிட்ட வழக்குகள் தடாகம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழில் பேட்டைகள் - அமைச்சர் ராஜா தகவல்