கோவையில் மின் மாற்றி மீது மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதிய விபத்தில் பல மணி நேரம் மி்ன்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கோவை மாவட்டம் இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்த நபர், காரை வேகமாக கடையின் அருகில் இருந்த மின்மாற்றி அருகில் நிறுத்த முயன்றார்.
undefined
ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்மாற்றி மீது மோதியது. இதில் மின்மாற்றி வெடித்ததுடன், காரின் மீது மின்மாற்றி சரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த மக்கள் முழு போதையில் இருந்த அந்த நபரை மீட்டு அவர் தப்பித்துவிடாமல் அமர வைத்தனர்.
டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழில் பேட்டைகள் - அமைச்சர் ராஜா தகவல்
இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அ.ம.மு.க கொடி கட்டிய வாகனத்தை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் போதை ஆசாமியின் செயலால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.