வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உலகில் உள்ள வன உயிரினங்கள் சிலவற்றை கண்டவுடன் மனிதர்கள் அதனை அடித்து கொன்று விடுகின்றனர். இதனால் விலங்கள் சில அழிந்து விட்டன. சில விலங்குகள் அழிவின் பாதையிலே பயணித்து வருகின்றன. அந்த வகையில் மண்ணுளியன் பாம்பு, நட்சத்திர ஆமைகள், எரும்பு தின்னி உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களால் பிடிக்கப்பட்டு சந்தைபடுத்தப் படுகின்றன. இவைகள் அரிய வகை உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்கள் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கின்றன. அவ்வாறான விலங்குகள் தென்பட்டால் உடனே வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலே கோவையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த எரும்பு தின்னி, ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் சுற்றித் திரிந்ததால். அதனை பார்த்த பொதுமக்கள், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினரை அழைத்து எரும்பு தின்னி நடமாட்டம் குறித்து தெரிவித்தனர்.
இந்து மகாசபா மாநில இளைஞரணி தலைவரை கொல்ல சதி? காவலாளியை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்
உடனடியாக சென்ற அந்த அமைப்பினர் அந்த எரும்பு தின்னியை மீட்டனர். மீட்க்கப்பட்ட எரும்பு தின்னி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதனை பத்திரமாக வன பகுதியில் விடுவித்தனர். இது போன்ற அரிய உயிரினங்களை பாதுகாப்பது அவசியம் எனும் உயிரியல் ஆர்வலர்கள், அரிய உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணவு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
போதை ஆசாமியின் சாகசத்தால் டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்து; பொதுமக்கள் அவதி