கோவையில் கொட்டித்தீர்த்த மழை... வெப்பம் தனிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

By Narendran S  |  First Published May 17, 2023, 10:34 PM IST

கோவையில் இன்று மாலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


கோவையில் இன்று மாலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்தது. மாநகர் பகுதிகளான ராமநாதபுரம் சிங்காநல்லூர் காந்திபுரம் குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும்,   புறநகர் பகுதிகளான துடியலூர், மருதமலை, வடவள்ளி சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்... 15 இடங்களில் 100 டிகிரியை கடந்ததால் மக்கள் அவதி!!

Latest Videos

தடாகம் சாலை, மசக்காளிபாளையம், பீளமேடு, நவ இந்தியா , புலியகுளம்  உட்பட நகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இருப்பினும் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்த வாகன ஓட்டிகள் சாலையின் வரம் தேங்கி இருந்த மழைநீரால் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடையும்  ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

click me!