தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகை… போலீஸார் - எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!

By Narendran S  |  First Published May 5, 2023, 8:30 PM IST

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகத்தை  முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகத்தை  முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கடந்த வாரம் 26 ஆம் தேதி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு மாற்றப்படும் பெண்கள் குறித்தான காட்சிகள் இருந்தன. மேலும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப் படம்  கிட்டதட்ட 30,000 கேரளப் பெண்கள் தங்களது விருப்பமின்றி இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐ. எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.

இதையும் படிங்க: தற்கொலை செய்த கர்ப்பிணியின் உடலை வீட்டு வாசலில் புதைத்த 50 பேர் மீது வழக்கு பதிவு!

Latest Videos

undefined

இதற்காக கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் இந்த படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி மொழியில் இன்று திரையிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: மீன்பிடி தடைக்காலம் : மீன் விலை கிடு கிடு உயர்வு! மீன்கள் வரத்து 50 சதவீதத்திற்கும் வீழ்ச்சி!

புரூக்பாண்ட் சாலை சிக்னல் அருகே முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் பல்வேறு பகுதியிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட இடங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!