வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற பக்தர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் சக பக்தர்கள்!!

By Narendran S  |  First Published May 5, 2023, 5:57 PM IST

கோவையில் சித்ரா பெளர்ணமியையொட்டி கோவிலுக்குச் சென்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கோவையில் சித்ரா பெளர்ணமியையொட்டி கோவிலுக்குச் சென்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி மலை சிவன் கோவிலுக்கு நேற்றிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சித்ரா பௌர்ணமியையொட்டி  அங்கு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், முன்னேற்பாடுகளும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநரே சொல்லிவிட்டார்..! 356 வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலையுங்கள்- இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

Latest Videos

undefined

இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ஏக மூர்த்தி என்பவர் நேற்று மாலை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். வெள்ளியங்கிரி மலை சிவனை தரிசிக்க ஏழு மலைகள் கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் ஏக மூர்த்தி இரண்டாவது மலையில் இளைப்பாறுவதற்காக அமர்ந்திருந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கியதாகத் தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்த பக்தர்கள் முதலுதவி சிகிச்சை புரிந்து அங்குள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தற்கொலை செய்த கர்ப்பிணியின் உடலை வீட்டு வாசலில் புதைத்த 50 பேர் மீது வழக்கு பதிவு!

உடனடியாக அங்கு சென்ற பாதுகாப்பு பணித்துறையினர் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஏக மூர்த்தியை பரிசோதித்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஏகமூர்த்தி தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!