கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை கைது செய்த காவல் துறையினர் தப்பச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை வாகனத்திலேயே துரத்தி மடக்கி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்துள்ளார். இருப்பினும் அதில் ஒரு நபர் பறித்த தாலி செயினுடன் தப்பி செல்லவே பிடிப்பட்ட மற்றொரு நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பொது தேர்வுக்கு படிக்க விடாமல் பாலியல் தொந்தரவு; அதிமுக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதான பழனிநாதன் என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.
பாலியல் மன்னன் பாதிரியார் பெனட்டிக் ஆன்டோ அதிரடி கைது
முன்னாள் ராணுவ வீரரே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.