கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றில் தமிழில் பேசிய தனது மகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் கட்டாயம் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். மாறாக தமிழில் பேசினால் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரின் தாயார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனது மகள் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 வகுப்பு படிக்கிறார்.
undefined
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உணவு அருந்தும் இடத்தில் உடன் படிக்கும் மாணவர் சுபிஷா மற்றும் பள்ளி தோழி (ஆசிரியரின் மகள்) இருந்த நிலையில் அவர்களிடம் ஒரு மாணவன் எனது தங்கை போன்று இருக்கிறார் என்று பேசி உள்ளார். அதற்கு ஆசிரியரின் மகள் உனது தங்கை பெயர் என்ன என்று கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரை சுபிக்ஷா தமிழில் கூறியதாக கூறப்படுகிறது.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருவானைக்காவல் கோவிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று பேர் தமிழில் பேசியதாகவும், அதற்கு தனது மகளுக்கு மட்டும் அபராதம் விதித்து உள்ளதாகவும், மேலும் அவர்கள் வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்த அவர் மகளை பாதியில் அங்கு செல்வதை நிறுத்தியதால் பழிவாங்க ஆசிரியர் இதுபோன்று தொடர்ந்து மகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், கூறிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவியை பழிவாங்க நினைக்கும் ஆசிரியரின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்ற நிலையில், இது போன்ற ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குழந்தைகள் மனதில் ஏற்படும் தற்கொலை முடிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.