நிர்வாகத்திடமே புகார் அளிக்க ஏற்பாடு; நோயாளி உயிரிழந்த நிலையில் கோவை மருத்துவமனை டீன் விளக்கம்..!

By Velmurugan s  |  First Published Jul 21, 2023, 12:27 PM IST

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் நேரிடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.


கோவை தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ், காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ் குமார்(வயது 38). கோவை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்கி கொள்ளவும் என மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்து கொள்வதில்லை எனவும் ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜேஷ்குமார் கிட்னியின் செயல்திறன் மோசமாக தான் இருந்ததாகவும், திசுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் நீண்ட நாட்களாகவே அவருக்கு பாதிப்பு இருந்ததால் அவருக்கு நீண்ட கால டயாலிசிஸ் தேவைப்படும் நிலை இருந்தாகவும், ஏற்கனவே 8 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

Latest Videos

undefined

மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஐந்தாம் தேதி தான் முதலில் சிகிச்சைக்கு அவர் வந்ததாகவும் அவருக்கு ஜெனடிக் பரிசோதனை செய்தபோது ஜீன்கள் மோசமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் இந்த பரிசோதனை செய்ய அதிக செலவு ஆகும் என்பதால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்ததாகவும், அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததாக கூறினார். 

காவல் நிலையத்தில் 68 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் இடை நீக்கம்

இங்கு அவருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளித்ததாகவும் அவர் வியாதிகளால் தான் இறந்ததாகவும் தெரிவித்த அவர் சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை என்றார். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும் இங்கு மருந்துகளை வெளியில் வாங்க கூறுவது இல்லை எனவும் லஞ்ச யார் கேட்டது என கூறினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் என்பது நடைமுறையில் இருப்பது தான் எனவும் மருந்து தட்டுப்பாடு ஏதேனும் இருந்தால் துறை தலைவர்கள் தரப்பில் உரிய தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும் ராஜேஷ்க்கு குணப்படுத்தும் வகையிலான நோய் இல்லை என தெரிவித்த அவர் 50 வயதிற்கு மேல் வரும் நோய் 35 வயதிலேயே அவருக்கு வந்து விட்டதாகவும் அதுமட்டும் இன்றி இணை நோய்கள் இருந்ததாகவும் கூறினார். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி என்றால் உடனடியாக எடுக்கப்படுவதாகவும், Elective cases என்றால் வேறு நாட்கள் குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மருத்துவமனை பணியாளர்களுக்கு பொதுவான ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க - வாழ்த்து கூறிய ஓ.பன்னீர்செல்வம்

கோவை அரசு மருத்துவமனையில் ஏதேனும் லஞ்ச முறைகேடுகள் நடைபெற்றால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க ஏதுவாக தொலைபேசி எண்களுடன் கூடிய சுவரொட்டிகள் தற்போது ஒட்டப்பட்டுள்ளதாகவும், இனி மருத்துவமனை நிர்வாகத்திடமும் நேரடியாக புகார் அளிக்கும் வகையில், தொலைபேசி எண்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

எந்த குற்றாச்சாட்டாக இருந்தாலும் அது  நிர்வாகத்தின் கவனத்தில் கொண்டுவரப்படும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது தீர்வு காணப்பட்டது வருவதாகவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.Coimbtore, Government Hospital, GH, Coimbatore Government Hospital, Hospital Deen, Complaint, கோவை, அரசு மருத்துவமனை, புகா

click me!