கோவை தங்க கட்டி வியாபாரி சீனிவாசன் வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த புகாரின் போரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அவர் வீட்டில் சோதனையிட்டு வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் தங்க கட்டி வியாபாரி சீனிவாசன். அவரது வீட்டில் இன்று (புதன்கிழமை) காலை முதல் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டில் உள்ள கணினி, வங்கி கணக்கு புத்தகங்கள், தங்க கட்டி விற்பனை குறித்த கணக்குகள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து வருகின்றனர்.
இவர் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் தங்க கட்டி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதில் கிடைத்த வருவாய்க்கு சரியாக ஜி.எஸ்.டி வரி கட்டாத காரணத்தினால் ஜி.எஸ்.டி அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.
undefined
அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!
சீனிவாசன் தங்க கட்டி வியாபாரத்தில் பல லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
வரி செலுத்தப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுகிறது. இந்தச் சோதனையின் முடிவில் அறிக்கை வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உம்மன் சாண்டியின் கடைசி ஆசை... மனைவி சொன்னதை அப்படியே நிறைவேற்றிய கேரள அரசு!