மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கால் கடுக்க நின்று, புகார் அளித்தால் அமர்ந்துகொண்டு வாங்கும் ஆட்சியருக்கு மாமன்னன் படத்திற்கான டிக்கெட்டை பாமக நிர்வாகி அனுப்பி உள்ளார்.
கோவை மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக இருப்பவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாளில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அப்போது மக்கள் குறை தீர்க்கும் முகாமில், அதிகாரிகள் அமர்ந்திருக்க, பொது மக்கள் வரிசையில் நின்றுதான் மனு கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
கால் கடுக்க மக்கள் நின்று அளிக்கும் மனுவை ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை அமர்ந்துகொண்டுதான் வாங்கி வருகின்றனர். மனு அளிப்பவரும் நின்றுகொண்டே தான் வழங்க வேண்டும். மக்கள் அமர்ந்து மனு கொடுக்க முடியாது. பொதுமக்கள் தாழ்வானவர்கள் கிடையாது என்பதால், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சமூக நீதி குறித்து ஆட்சியர் அறிந்துகொள்ள, அவருக்கு மாமன்னன் படத்திற்கான டிக்கெட்டை அசோக் ஸ்ரீநிதி வாங்கி அனுப்பி படத்தை பார்த்து புரிந்துகொள்ள வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியரிடம் நின்றுகொண்டு மனு அளித்த போட்டோ மற்றும் ஆட்சியருக்கு அனுப்பிய மாமன்னன் டிக்கெட்டையும், தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
இதையும் படியுங்கள்... துணிவு முதல் மாவீரன் வரை.. தொட்டதெல்லாம் ஹிட்டு! 6 மாதத்தில் 6 பிளாக்பஸ்டர் மூவீஸ்- மாஸ் காட்டும் ரெட் ஜெயண்ட்
அசோக் ஸ்ரீநிதி தன் ட்வீட்டர் பக்கத்தில் "நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
1. குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும்.
2. பின்பு ரசீதை வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.
3. பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள். நாங்கள் உங்கள் முன் "நின்று பேச வேண்டும்"
உங்களை நாங்கள் அந்நார்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எங்களை கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும், உங்களைவிட நாங்கள் (மக்கள்) தாழ்வானவர் போலவும் இருக்கும். நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும்? நீங்கள் வெறும் அரசு ஊழியர் தான். மக்களின் பிரச்சினையை தீர்ப்பது உங்கள் கடமை. மேடையில் இடமிருந்தும், மக்களை ஏன் நிற்கவைக்க வேண்டும்? உங்களின் முன் நாங்கள் உட்கார கூடாதா?
உடனடியாக இதை சரி செய்யவும். இல்லையென்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன் தான் வருவேன். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள். மக்களை தவறாக நடத்த வேண்டாம். என தமிழக முதலமைச்சருக்கு டேக் செய்து, ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
. நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
1. குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும்.
2. பின்பு ரசீதை pic.twitter.com/VDGYo5NUJ0
இதையும் படியுங்கள்... தேசிய விருதை எடுத்து வைங்க டா... ஜிவி பிரகாஷின் 100-வது படத்திற்காக இணையும் செம்ம மாஸ் கூட்டணி