பிரசவ வலியால் துடித்த பெண்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை… பின்னர் நடந்தது என்ன?

Published : Oct 19, 2022, 11:42 PM ISTUpdated : Oct 20, 2022, 12:03 AM IST
பிரசவ வலியால் துடித்த பெண்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை… பின்னர் நடந்தது என்ன?

சுருக்கம்

கோவையில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

கோவையில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி மணிமேகலை. 26 வயதான இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மணிமேகலைக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கணவர் சிலம்பரசன், காரமடை பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவியுங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மணிமேகலையை ஏற்றிக்கொண்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புறப்பட்டது. அப்போது வீரபாண்டி பகுதி அருகே மணிமேகலைக்கு பனிக்குடம் உடைந்து ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிங்க: போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் சங்கர் கணேசன் ஆகியோர் மணிமேகலைக்கு முதல் உதவி செய்தனர். இதைத்தொடர்ந்து தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவரும் புதூர் பகுதியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் நலமாக உள்ளனர். இதனிடையே துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் சேயை காப்பாற்றிய மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி