கோயமுத்தூரில் மாணவிகளின் நலனுக்காக போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்!!

By Dhanalakshmi GFirst Published Oct 19, 2022, 5:55 PM IST
Highlights

கோவை மாநகரில் உள்ள 60 கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் நலனுக்காக 37 காவலர்களுக்கு போலீஸ் அக்கா (Police Akka) என்ற திட்டத்தை கோவை மாநகர காவல் துறையினர் செவ்வாய் கிழமை தொடங்கி வைத்தார்.

போலீஸ் அக்கா என அழைக்கப்படும் இவர்கள் காவல்துறையில் நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்து, அவசர காலங்களில் மாணவிகள் தங்குவதற்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையத்தில் இருக்கும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இவர்களது கடமையாகும்.

காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் இந்த திட்டத்தை தொடங்கிவைத்து, திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்கள் மற்றும் நகரிலுள்ள 60 கல்லூரிகளின் பிரதிநிதிகளிடம் பேசினார். கமிஷனரின் கூற்றுப்படி, நகர காவல்துறை அனைத்து கல்லூரிகளிலும் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்தும். அதில் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் மாணவிகள் முன்னிலையில் விவாதிக்கப்படும்.

காவலரின் தொடர்பு எண்கள் அனைத்து மாணவிகளுக்கும் பகிரப்படும். காக்கி உடையில் இருக்கும் சகோதரிகள் அவ்வப்போது கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகளுடன் நல்ல உறவைப் பேணுவார்கள்.

கோவை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற  வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது! 

பல்வேறு பிரச்சனைகளில் உதவுமாறும், காவலர்களுக்கு இடம் வழங்குமாறு கல்லூரி நிர்வாகங்களிடம் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். காவலர்கள் சில மணி நேரங்களை வளாகங்களில் செலவிடுவார்கள். இந்த சமயத்தில் மாணவர்கள் சைபர் தாக்குதல்கள், துன்புறுத்தல், பின்தொடர்தல், ராகிங் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் உதவியை நாடலாம்.

கோயம்புத்தூர் நகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையகம்) ஆர்.சுகாசினி, கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் இத்திட்டத்திற்காக ஏற்கனவே பயிற்சி பெற்ற 37 காவலர்களிடம் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசினார்.

கோவை மாநாகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் தரையில் அமர்த்து போராட்டம்!!

click me!