கோவை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற  வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது! 

Published : Oct 19, 2022, 12:30 PM IST
கோவை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற  வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது! 

சுருக்கம்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற  வட மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசராணை மேற்கொண்டுள்ளனர்

கோவை தொண்டாமுத்தூர் பூலுப்பட்டி சிறுவாணி சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதிக்கு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21வயது இளைஞரான பைசுல் இஸ்லாம் என்பவரிடம் கஞ்சா போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. 

அவரிடம் இருந்து, 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர் அதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

அதேபோல கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் மர்ம நபர்கள் குறித்து தகவல் கொடுக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் வாட்ஸ் ஆப் எண் தற்போது வழங்கப்பட்டுள்ளது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?