Diwali 2022 : தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இரவு ஒரு மணி வரை போக்குவரத்து சேவை!

By Dinesh TG  |  First Published Oct 18, 2022, 6:34 PM IST

கோவையில் தீபாவளி பண்டிகை ஒட்டி அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும் எனவும், நள்ளிரவு வரையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இது குறித்து மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு இரவில் கடைவீதிகளுக்கு வந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், 18.10.2022 ஆம் தேதி கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

Diwali 2022 TV Special Movies : தீபாவளிக்கு டிவியில் என்ன படம்?...இதோ சின்னத்திரை மூவி லிஸ்ட்

மேற்படி ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் இரவு 01.00 மணி வரை செயல்படும். மேலும், பொதுமக்கள் வியாபாரத்தளங்களுக்கு வருகைபுரிந்து இரவு 01.00 மணி வரை பொருட்களை வாங்கிச்செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Latest Videos

Diwali: தீபாவளிக்கு அடுத்த நாள் உள்ளூர் விடுமுறை..? வெளியான சூப்பர் தகவல்..
 

click me!