’அந்த 4 பேர் பண்ணத விட மோசம் அரசியல்வாதிங்க பண்றது...’’ பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி பெண் பரபரப்பு பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2019, 3:13 PM IST
Highlights

தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரத்தை அரசியலாக்கி தங்களை இழிவு படுத்துவதாகவும், பொள்ளாச்சி ஜெயராமன் எங்களுக்கு உதவி செய்தவர். அவரை இந்த விவகாரத்தில் இழுத்து விட்டு அரசியலாக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக் கொண்டுள்ளார். 

தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரத்தை அரசியலாக்கி தங்களை இழிவு படுத்துவதாகவும், பொள்ளாச்சி ஜெயராமன் எங்களுக்கு உதவி செய்தவர். அவரை இந்த விவகாரத்தில் இழுத்து விட்டு அரசியலாக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ’’எல்லோருக்கும் வணக்கம் நான் பொள்ளாச்சியில பாலியல் வன்கொடுமையில பாதிக்கப்பட்ட பெண் பேசுறேன்... திருநாவுக்கரசு, சதீஷ், சபரி ராஜன், வசந்தகுமார் இவங்க மேல புகார் கொடுத்தது நான் தான். காரணம் இனிமேல் என்னைப்போல எந்தப்பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்க குடும்ப நண்பரான எலுமிச்சைப்பட்டியை ஒருவர் மூலமாக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் பேசினார். 

அவர் உடனடியாக மறுநாளே என்னைக் கூட்டி கொண்டு எஸ்.பி.பாண்டியராஜன், டி.எஸ்.பி ஜெயராமன்கிட்ட உடனடியா நடவடிக்கை எடுக்க சொல்லி இருந்தாங்க. அன்னைக்கு நைட்டே திருநாவுக்கரசை தவிர எல்லோரையும் கைது பண்ணிட்டாங்க. அடுத்த நாளில் திருநாவுக்கரசையும் கைது பண்ணிட்டாங்க. ஆனால் சில விஷக்கிருமிகள் நான் பாதிக்கப்படுவேன் எனத் தெரியாமல் இதை அரசியல் ஆக்கிட்டாங்க. என்கிட்ட பொள்ளாச்சி ஜெயராமன் சொல்லியிருந்த வாக்குறுதி ‘இந்த வழக்கு சம்பந்தமாக என் பெயரையோ, என் குடும்பத்தை பற்றியோ வெளியே வராது’’ எனச் சொல்லி இருந்தார். 


வழக்குத் தொடரப்பட்டு ஒரு மாதம் ஆகிடுச்சு. ஆனால், தேர்தல் அறிவித்த மறு நாளே இதை அரசியல் ஆக்கிட்டாங்க. இந்த வழக்கில் ஆளும் கட்சியை சேர்ந்த யாருமே இல்லை. ஆகையால் இதை அரசியல் ஆக்காமல் உரியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கணும். வதந்தி பரப்புரவங்க மீதும் நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டுக்குறேன். இந்த விஷயத்தால் நானும், எங்க க்டும்பமும் ரொம்ப மன உளைச்சலில் இருக்குறோம். 

இந்த விஷயத்தில் முதன் முதலா எங்களுக்கு உதவி செய்தவர் பொள்ளாச்சி ஜெயராமன் தான். அவருக்கு ரொம்ப நன்றி. தேவைப்பட்டால் இதை உறுதி செய்ய மீடியாக்களை சந்திக்கவும் தயாராகவும் இருக்கோம். இந்த நாலு பேர் செய்த காரியத்தை விட இந்த அரசியல்வாதிகள் செய்யும் வேலைகள் எங்க குடும்பத்தை தற்கொலை செய்ய தூண்டுற அளவுக்கு இருக்கு. தயவு செய்து அரசியலாக்கி எங்க வாழ்க்கையில விளையாட வேண்டாம்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

click me!