தென்னக ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள கோவை ரயில் நிலையத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி கோட்டம் அமைக்கப்படுமா என பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென்னக ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய 10 முக்கிய ரயில் நிலையங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களின் வரிசையில் கோவை ரயில் நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளதாக ராக் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
undefined
இது தொடர்பாக அந்த அமைப்பின் இணைச்செயலாளர் சதீஷ் கூறுகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் கோவை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 - 24ம் நிதியாண்டில் ரூ.325 கோடி ரூபாயை கோவை ரயில் நிலையம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மனைவி சௌமியாவுடன் அன்புமணி சிறப்பு வழிபாடு
இந்நிலையில், சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் ரயில்வே கோட்டமாக செயல்படும் நிலையில், கோவை ரயில் நிலையத்தையும், ரயில்வே கோட்டமாக மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவையில் இருந்து டெல்லி, ஜபல்பூர், தன்பாத் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.