கோவையில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த நபர் உயிரிழப்பு!

By Manikanda Prabu  |  First Published Apr 28, 2024, 2:32 PM IST

கோவையில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


கோவை சாய்பாபா காலனி கருப்புசாமி வீதி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது மகன் ஆனந்த். அவருக்கு சற்று மனநல பிரச்சினை இருந்த நிலையில், உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு அவரது தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா ஆகியோர் ஆனந்தை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நகரப் பேருந்து முன்பாக திடீரென ஆனந்த் பாய்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி முருகனுக்கு நிலக் கொடை: 18 ஆம் நூற்றாண்டு சிவகெங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிப்பு!

பேருந்தின் மீது ஆனந்த் பாயும் வீடியோவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவையில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் இளைஞர் ஒருவர் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!