கார் போர் அடிக்குது; தனி ஆளாக பஸ்சில் ஏறி சென்ற சிறுவன் - குழந்தையை காணாமல் அலறி துடித்த பெற்றோர்

By Velmurugan s  |  First Published Apr 15, 2024, 8:07 PM IST

தருமபுரியில் காரில் இருந்து திடீரென மாயமான 5 வயது சிறுவனை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


கோவை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு, (வயது 40). கோவை தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தனது குடும்பத்துடன் தருமபுரி பென்னாகரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு காரில் வந்துள்ளனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்த போது, தனது மகன் பிரித்திவி, (5). காரிலிருந்து இறங்கியது அவர்களுக்கு தெரியவில்லை.

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத பாஜக கோவை தொகுதியில் எப்படி வெற்றி பெறும்? வேலுமணி கேள்வி

Tap to resize

Latest Videos

சிறிது நேரத்தில் மகனை காணவில்லை என தேடியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினரின் உதவியை நாடிய நிலையில், தருமபுரி காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவன் சேலம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் ஏறியதை கண்டுபிடித்தனர். பின்னர் உடனடியாக அங்கிருந்து சேலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தருமபுரி காவல் துறையினர், சிறுவன் குறித்த தகவலை தெரிவித்துள்ளனர். 

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் திருப்பூருக்கு பெரும் பின்னடைவு - கமல்ஹாசன்

அதன்படி பகல் 1.15 மணிக்கு ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த பேருந்தில் இருந்த சிறுவனை ஓமலூர் காவல் துறையினர் மீட்டு,  ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின் அங்கு வந்த தருமபுரி காவல் துறையினரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பெற்றோர் மனமாற நன்றி தெரிவித்தனர்.

click me!